கல்லூரி ஆய்வகத்தில் வாயு கசிவு 25 மாணவர்களுக்கு மூச்சு திணறல்

தெலுங்கானா மாநிலம், ஹைத்திராபாத்தில் கஸ்தூரி பாய் பெண்கள் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள வேதியியல் ஆய்வகத்தில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டதில் 25 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே அவசர ஊர்தி மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சம்பவம் அறிந்து அங்கு விரைந்த போலீசார், எந்த ரசாயனத்தால் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :