தி.மு.க.அரசு பொறுப்பேற்று ஒராண்டு நிறைவுபேருந்தில் பயணித்த தமிழக முதலமைச்சர்
தி.மு.க.அரசு பொறுப்பேற்று ஒராண்டு நிறைவு பெற்றதை அடுத்து பொதுமக்களின் கருத்துக்களை அறிய
விரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 29c பேருந்தில் ஏறி ,நின்றபடி பேருந்தில்
பயணித்த பெண் பயணிகளிடம்,நடத்துனரிடம் ஒராண்டு ஆட்சி பற்றிய கருத்துக்களை கேட்டறிந்தவர்,தம்
கோபாலபுர வீட்டிற்குச்சென்று கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தததோடு,தாயிடம் ஆசி பெற்ற
முதல்வர் தம் பால்ய நண்பர்களைச்சந்தித்து நலம் விசாரித்து கலந்துரையாடினார்.கோபாலபுரத்தில் சிறப்பான
வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்
Tags :



















