புதுச்சேரிக்கு முதலவர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள்

by Staff / 07-04-2024 12:49:38pm
புதுச்சேரிக்கு முதலவர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதிகள்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரியில் இன்று (ஏப்ரல் 7) பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரியில் மின் துறையை தனியாருக்கு தாரைவார்க்க திட்டம் கைவிடப்படும், புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள், பஞ்சாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்படும், காரைக்காலில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும், கோயில் நகரம் திட்டத்தின் கீழ் காரைக்கால் மேம்படுத்தப்படும், புதுச்சேரியில் முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படும் உள்ளிட்டவாக்குறுதிகளை வழங்கினார்.

 

Tags :

Share via