ஜம்மு காஷ்மீரில்காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உடல் நலக்குறைவு.

by Admin / 30-09-2024 01:25:38am
ஜம்மு காஷ்மீரில்காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உடல் நலக்குறைவு.

ஜம்மு காஷ்மீரில் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜெஸ்ரோட்டாவில் இன்று நடைபெற்ற அரசியல் பேரணியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கதுவா மாவட்டத்தில் பிராபரிலுள்ள கோக் பகுதியில் நேற்று நடந்த எண் என் கவுண்டரில் கொல்லப்பட்ட காவலர் பஷீர் அகமதுக்கு அஞ்சலி செலுத்த முயன்ற பொழுது அவர் தடுமாற்றத்துடனும் சோர்வுடனும் காணப்பட்டார்.. இந்நிலையில், அவரால் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் தடுமாறி விழக்கூடிய சூழலில் மேடையில் இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் வழங்கி ஆசுவாசப்படுத்தினர்.. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களுள் ஒருவர் கார்கே நலமாக இருப்பதாகவும் வெப்ப நிலை காரணமாக அவர் சோர்வாக இருப்பதாகவும் மேடையில் மின்விசிறியோ குளிரூட்டியோ இல்லாத காரணத்தினால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை உடனடியாக கதுவா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளித்தனர்.

ஜம்மு காஷ்மீரில்காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உடல் நலக்குறைவு.
 

Tags :

Share via