போனஸ் தொகையை உயர்த்தி வழங்க அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

by Staff / 09-11-2023 04:56:04pm
போனஸ் தொகையை  உயர்த்தி வழங்க அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது தலைமையிலான அதிமுகவின் ஆட்சியில் கரோனா பெருந்தொற்றுக்கு முன்பு, 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை தமிழக அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் (கூட்டுறவுத் துறை மற்றும் வனத் துறை உட்பட) தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக 20 சதவீதம் வழங்கப்பட்டது. எனவே, 2022-2023ம் ஆண்டுக்கான அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக (Ex Gratia) 20 சதவீதம் வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தினோம். உடனடியாக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும்; அதிமுக ஆட்சியில் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தில் வழங்கியது போல், 2021-ஆம் ஆண்டு முதல் 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via