நாளை ஜூலை 29 ஆம் தேதி அரசு விடுமுறை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து.

by Editor / 28-07-2023 10:14:47pm
நாளை ஜூலை 29 ஆம் தேதி அரசு விடுமுறை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து.

மொஹரம் பண்டிகையை ஒட்டி தமிழ் நாட்டில் நாளை ஜூலை 29 ஆம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை வருவதால், பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக, இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப வர ஏதுவாகவும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories