நடிகர் ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் ஆகியோரின போயஸ் கார்டன் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல்
இன்று அதிகாலை தமிழக காவல்துறை தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம மின்னஞ்சல் மூலம் நடிகர் ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் ஆகியோரின போயஸ் கார்டன் வீடுகளுக்கு வெடி குண்டு மிரட்டல் வந்தது. அதனை தொடர்ந்து தேனாம் பேட்டை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும்மோப்ப நாய் உதவியுடன் இருவர் வீடுகளிலும் தீவிர சோதனை நடத்தினர் நீண்ட நேர சோதனைக்குப் பின்பு வெடிப்பொருள்கள் எதுவும் சிக்கவில்லை என்றும் இது ஒரு போலி மிரட்டல் என்றும் காவல்துறையினர் உறுதி செய்தனர். இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியது யார் என்பது குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :


















