பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் (56), உடல்நலக் குறைவு காரணமாக இன்று (செப்.24) காலமானார். இந்நிலையில், அவரது மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார். மேலும், பீலா வெங்கடேசனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசு உயர் அலுவலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
Tags : பீலா வெங்கடேசன் ஐஏஎஸ் மறைவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்