டெட் தேர்வு தீர்ப்பு பற்றி ஆசிரியர்கள் கவலை பட வேண்டாம்.-. அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தென்காசி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் ஆய்க்குடி அருகே உள்ள தனியார் கல்லூரியின் கூட்டரங்கில் வைத்து மாநில அளவிலான அடைவுத் தேர்வு குறித்த மாவட்ட கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று தலைமை ஆசிரியர்களுக்கு ஆலோசனைகள வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேட்டியின் போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில்
38 வது மாவட்டமாக தென்காசியில் மாநில அளவிலான ஆய்வு கூட்டம் நடந்தது. இங்கொன்றும் அங்கொண்றுமாக ஏன் நடந்து வருகிறது மொத்தமாக இந்த ஆய்வை நடத்தலாமே என்று தமிழ்நாட்டு உள்ள அரசு பள்ளிகளில்
9.80 லட்சம் குழந்தைகளை ஆய்வு செய்யப்பட்டது. இதில் தென்காசி மாவட்டம் 4 இடத்தில் உள்ளது. ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் தென்காசி மாவட்டம் 94 சதவீதம் தேர்வு பெற்றுள்ளது. இனி வரும்
பொதுத் தேர்விலும் முன்னேற்றம் அடைவார்கள்.
டெட் தேர்வு தீர்ப்பு பற்றி ஆசிரியர்கள் கவலையில் உள்ளனர். ஆசிரியர்கள் கவலை பட வேண்டாம். அதை அரசு அரணாக இருந்து பார்த்துக் கொள்ளும் என்று கூறி இருக்கிறோம்.
கல்வி பிறந்த தமிழ்நாடு என்ற கருத்தரங்கம் சென்னையில் நாளை நடக்கிறது. இதில் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள்.
தமிழ்நாட்டில் டெட் தேர்வு எழுதி பாஸ் ஆனவர்கள் தனியார் பள்ளியில் பணி செய்து வருகிறார்கள்.
ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் டி.ஆர்.பி மூலமாக 8388 ஆசிரியர்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3227 ஆசிரியர்களுக்கு பணிக்கான அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது. இதே போன்று பிஜி ஆசிரியர்கள் 1200 எடுப்பதற்கு அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது.
எந்த இடத்திலும் ஆசிரியர்கள் இல்லாத நிலை வந்து விடக் கூடாத என்பதில் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேட்டியின் போது கூறினார்.
Tags : டெட் தேர்வு தீர்ப்பு பற்றி ஆசிரியர்கள் கவலை பட வேண்டாம்.-. அன்பில் மகேஷ் பொய்யாமொழி.