நிர்வாண பட மிரட்டல் விடுத்து ரூ.3 லட்சம் மோசடி
புதுச்சேரி நெல்லித்தோப்பைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ் என்பவர் அவசர தேவைக்காக சில மாதங்களுக்கு முன்பு செல்போன் செயலி மூலம் ரூ.10,000 கடன் பெற்று, ஒரு வாரத்தில் அதை திருப்பி செலுத்தியுள்ளார். இந்த நிலையில், ஆண்ட்ரூஸின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், அவரின் நிர்வாண படங்களை வெளியிடுவேன் என மிரட்டி ரூ.2.81 லட்சம் பணம் பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :