அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக்
மலையாளத்தில் வெளியான சூப்பர் ஹிட் ஆக்சன் திரில்லர் திரைப்படம் அய்யப்பனும் கோஷியும் இப்போது தெலுங்கில் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது இதில் நடிகர் பவன்கல்யாண் மற்றும் ராணா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கும் போலீஸ் அதிகாரிக்கும் இடையே ஏற்படும் ஈகோ மோதல் பின் எவ்வாறு மிகப்பெரிய பிரச்சனையாக விஸ்வரூபம் எடுக்கிறது என்பதை மிக சுவாரசியமாக உண்மை தன்மை குறையாமல் காட்டி இருந்தனர். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய கவனத்தை பெற்றதை அடுத்து இப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப் பட்டு வருகிறது.
அய்யப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் அதன் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
Tags :