திமுக.,வுடன் இணைந்து பணியாற்றுவோம் - ராகுல் 

by Editor / 18-06-2021 09:07:10pm
 திமுக.,வுடன் இணைந்து பணியாற்றுவோம் - ராகுல் 

 

தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுக.,வுடன் இணைந்து பணியாற்றுவோம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த ஸ்டாலின், பிரதமருடனான சந்திப்பு மனநிறைவை அளித்ததாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து இன்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும், காங்., எம்பி., ராகுலை நேரில் சந்தித்து பேசினார். முதல்வருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் சென்றிருந்தார்.சந்திப்பிற்குப் பின்னர் காங்கிரஸ் எம்.பி., ராகுல் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, 'தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி. தமிழ் மக்களுக்கான ஒரு வலுவான மற்றும் வளமான அரசைக் கட்டமைக்க திமுக.,வுடன் இணைந்து பணியாற்றுவோம்,' எனப் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories