12 மணி நேர வேலை; களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

by Editor / 23-04-2023 11:23:08pm
 12 மணி நேர வேலை; களமிறங்கும் தொழிற்சங்கங்கள்

தமிழக சட்டப்பேரவையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 12 மணி நேர வேலைதிட்ட  மசோதாவை எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பை மீறி திமுக சார்பில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 12 மணிநேர வேலை சட்ட மாசோதாவை திரும்பப் பெறக்கோரி முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். மே 12ல் தொழிற்சங்கங்கள், தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தம், மறியல் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சென்னையில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் போராட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக வரும் 27ம் தேதி முறைப்படி முதல் நோட்டீஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo