உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஒரே மாதிரியான ஓய்வூதியம்

உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாகுபாடின்றி ஒரே மாதிரியான ஓய்வூதியம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓய்வூதியம் வழங்குவதில் வேறுபாடு என தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த ஆணையை பிறப்பித்து உள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும். மேலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள், கூடுதல் நீதிபதிகள் ஓய்வு பெற்றால் ஆண்டுக்கு ரூ.13.6 லட்சம் ஓய்வூதியம் தர வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :