சிவகாசி அருகே நள்ளிரவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..

by Editor / 19-03-2023 07:20:22am
சிவகாசி அருகே நள்ளிரவில் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..

சிவகாசி அருகே நாரானாபுரம் புதூரில் ராஜராம் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீமகேஸ்வரி  பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல் நேற்று மாலை பணி முடிந்து ஆலை பூட்டப்பட்ட நிலையில்  திடீரென நள்ளிரவில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பயங்கர சப்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து சம்பவம் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். விபத்தில் 1 அறை தரைமட்டமானது.  விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு தயாரிக்க கலவை செய்த ரசாயன மூல பொருட்களை காலி செய்யாமல் வைக்கப்பட்டதால் அவை வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. நள்ளிரவில் விபத்து ஏற்பட்டதால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை

 

Tags :

Share via

More stories