கேரளா மீன் குழம்பு எப்படி செய்வது

by Admin / 29-07-2021 04:02:03pm
கேரளா மீன் குழம்பு எப்படி செய்வது

 

செய்முறை

        500 கிராம் வஞ்சிரம் அல்லது சுறா மீன் துண்டுகளை தயாராக வைத்துக் கொள்ளவும். 2 பெரிய வெங்காயம், 1 தக்காளி, 2 பச்சை மிளகாய்களை நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் 2 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி சூடேறியதும் 5 மேஜைக்கரண்டி தேங்காய் துறுவல், 1 தேக்கரண்டி சோம்பு (பெருஞ்சிரகம்) இவற்றை வறுத்து எடுத்து வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 5 தேக்கரண்டி இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, சூடேறியதும் நறுக்கிய வெங்காயம், 6 பல் பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி போட்டு வதக்கவும். வதங்கியவுடன் 1 டம்ளர் வெந்நீர் ஊற்றவும். இதில் 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு போட்டு கொதிக்கவிடவும். கொதித்ததும் மீன் துண்டுகளைப் போடவும். மீன் துண்டுகள் வெந்ததும், அரைத்த மசாலாவைப் போட்டு சில நிமிடங்கள் கொதித்ததும் வறுத்த கருவேப்பிலையைப் போட்டு, இறக்கி உபயோகிக்கவும்.

 

 

Tags :

Share via