வாத்து ரோஸ்ட் செய்முறை
தேவை
வாத்து இறைச்சி – 1 கிலோ
மிளகாய்தூள் – 2 டேபிள் டீஸ்பூன்
தனியாதூள் – 2 டேபிள் டீஸ்பூன்
மிளகுதூள் – 1/2 டேபிள் டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
பெ.சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
கிராம்பு – 2
பட்டை – 1 துண்டு
பெ.வெங்காயம் – 1 கப்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 1
வினிகர் – 1/2 டேபிள் டீஸ்பூன்
உப்பு – தேவையானது
கடுகு – 1 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – 2
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
இறைச்சியை பெரிய துண்டுகளாக நறுக்கவும். உருளைக்கிழங்கை அரை வேக்காடாக்கி ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நறுக்கவும். மசாலா பொருட்களை நைஸாக அரைத்து அதில் உப்பு, வினிகர் கலந்து கறியில் பிசைந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். சிறிதளவு மசாலாவை தனியாக எடுத்து வைக்கவும். எண்ணெயில் கறித்துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
தனியாக சிறிதளவு எண்ணெய் எடுத்து அதில் கடுகை தாளித்து பெ.வெங்காயத்தை வதக்கி தனியாக எடுத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது வறுத்த கறித்துண்டுகளை போட்டு 2 கப் வெந்நீர் விட்டு வேக வைக்கவும். கலவை கெட்டியாகி இறக்கும் தருவாயில் உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து 1 கொதி விட்டு இறக்கவும்.
Tags :