சூப்பர் ஸ்டார் -உலகநாயகன் - தல - தளபதி-  மன்னர்களாகிய நீங்கள் ஆணையிட்டால் ....விஜய்

by Admin / 02-11-2023 12:42:12am
 சூப்பர் ஸ்டார்  -உலகநாயகன் -  தல -  தளபதி-  மன்னர்களாகிய  நீங்கள் ஆணையிட்டால் ....விஜய்

நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜயின் நடிப்பில் உருவான லியோ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதை கொண்டாடும் விதமாக வெற்றி சந்திப்பு என்கிற பெயரில் நிகழ்வு நடந்தது .இந்நிகழ்வில், விஜய் தம் ரசிகர்களை உசுப்பேற்றும் விதமாக அரசியல் பயணத்தை தொடங்குவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக தம் பேச்சை ஆரம்பித்தார்.

பொதுவாகவே அவர் ஒவ்வொரு படத்தில் நடித்து முடித்தவுடன் படம் வெளியீட்டுக்கு முன்பாக பேட்டி கொடுப்பது சகஜம் .ஆனால் இந்த முறை ஆடியோ லாஞ், ட்ரைலர் வெளியிடப்படாத நிலையில், பட வெற்றி விழா கொண்டாடும் மேடையில் ,தான் பொத்தி வைத்த அரசியல் ஆசைகளையும் கோவங்களையும் ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக பேசினார்

..முதல்வன் பட பாணியில் நடிகர் அர்ஜுன் கேள்வி கேட்க, அதற்கு விஜய் பதில் சொல்லும் மாதிரியான ஒரு நிகழ்வு அங்கு அரங்கேறியது .அதில் கேட்கப்பட்ட கேள்வியும் சொல்லப்பட்ட பதிலும் அரசியலை நோக்கி அவர் பயணிக்க இருப்பதை தெளிவுபடுத்தும் விதமாகவே அமைந்திருந்தது. ரசிகர்களும் அவர் எப்பொழுது அரசியலுக்கு வர போகிறார் என்கிற மாதிரியாக கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர்

புரட்சித்தலைவர் ஒருத்தா், நடிகா் திலகமொருத்தா்  மன்னர் மக்களாகிய நீங்கள் ஆணையிட்டால் தளபதி செய்து முடிப்பான்..ஒரு சூப்பர் ஸ்டார் -ஒரு உலகநாயகன்- ஒரு தலை- ஒரு தளபதி- மன்னர் மக்களாகிய நீங்கள் ஆணையிட்டால்  தளபதி அதைச் செய்து முடிப்பான் என்கிற அவருடைய பேச்சு.. இப்பொழுது ரசிகர்களுக்குள்ளே அரசியல் வெப்பத்தை கிளப்பி விட்டுவிட்டது. 2026 இல் என்கிற ஒரு இலக்கு அவர் ரசிகர்களுக்கு வைத்திருக்கிறார் 2026 இல் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதை மறைமுகமாக அதை நோக்கி அவருடைய பயணம் மெல்ல மெல்ல ஆரம்பமாகி உள்ளது என்பதை பட்டவர்த்தனமாக ஏன் சூசகமாக தெரிவித்துள்ளார் மொத்தத்தில் அடுத்த படம் வரும் வரை ரசிகர்களிடம் விஜய் பற்றிய பேச்சு அரசியலை ஒட்டியே நகர்ந்து கொண்டிருக்கும்..

ஒரு சூப்பர் ஸ்டார் -ஒரு உலகநாயகன்-ஒரு கேப்டன்- ஒரு தல- ஒரு தளபதி- அரசர்களாகிய நீங்கள் ஆணையிட்டால், தளபதி அதைச் செய்து முடிப்பான் என்கிற அவருடைய பேச்சு இப்பொழுது ரசிகர்களுக்குள்ளே அரசியல் வெப்பத்தை கிளப்பி விட்டுவிட்டது.

 

Tags :

Share via