10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமறைவான வாலிபர் கைது.

by Editor / 04-06-2022 12:09:31pm
10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை தலைமறைவான வாலிபர் கைது.

குமரி மாவட்டம் திருவட்டார் அருகே கீழ சாய்க்காடு வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் விஜின் (வயது 31). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அத்துமீறி ஒரு வீட்டுக்குள் புகுந்து  அங்கு தனியாக இருந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் தாய் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த  விஜின் தலைமறைவாகி விட்டார்.இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விஜினை வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே தலைமறைவாக இருந்து வந்த விஜின்  கீழ சாய்க்காட்டில் உள்ள தனது வீட்டுக்கு வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து விஜினை மடக்கி பிடித்து கைது செய்தனர். 

 

Tags : 10th class student arrested for sexually harassing youth

Share via