தூத்துக்குடி,தென்காசி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் நடைபெறுகிறது.

தூத்துக்குடி,தென்காசி மாவட்டத்தில்,தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி.தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அன்றைய தினம் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் வேறொரு தேதியில் நடத்தப்படும் எனவும், அதேபோல் 21, 22-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு அதுவும் மற்றொரு தேதியில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினத்தை முடிந்து நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் தூத்துக்குடி,தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று முதல் நடத்தப்படும் எனவும் தூத்துக்குடி,தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 18-ம் தேதி நடைபெற இருந்த கணிதத் தேர்வு-இன்று 3-ம் தேதியும், 20-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 4-ம் தேதியும், 21-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 5-ம் தேதியும், 22-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 8-ம் தேதியும் நடைபெறுகிறது.
Tags : தூத்துக்குடி,தென்காசி மாவட்டத்தில் அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் நடைபெறுகிறது.