கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெற வலியுறுத்தல்

அக்.10ஆம் தேதிக்குள் கனடா தனது தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு பின்னர் இந்தியாவில் இருக்கும் அவர்களின் தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்று இந்தியா கூறியிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் 62 கனேடிய அதிகாரிகள் உள்ளனர். காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
Tags :