பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

by Admin / 27-05-2025 10:52:09am
 பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது

பெய்து வரும் காற்றுடன் கூடிய கனமழையால் 6 வது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது  சீர்செய்யும் பணியை அதிகாரிகள் மேற்க் கொண்டு வருகின்றனர் கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த இரண்டு தினங்களாக  வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்த நிலையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது  இந்நிலையில் இன்று காலை வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள 6 வது கொண்டை ஊசி வளைவில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் நேற்று மானாம்பள்ளி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது மேலும் சக்தி தலனார் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததால் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு இரண்டு தினங்களாக மின்சாரமின்றி அப்பகுதி பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர் இந்நிலையில் நேற்று இரவு கருமலை எஸ்டேட் தேயிலை ஆலை அருகே மரம் முறிந்து மின்கம்பம் மீது விழுந்ததால் மின்கம்பம் உடைந்து கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது  இந்நிலையில் கனமழையால் இன்று வால்பாறையில் உள்ள கருமலை இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு மற்றும் பிர்லா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது இதனால் அனைத்து துறைசார்ந்த அதிகாரிகளும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo