யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 86 பேர் தேர்ச்சி

by Editor / 19-03-2022 09:40:15am
யுபிஎஸ்சி மெயின் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 86 பேர் தேர்ச்சி

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு 712 பதவிகளை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் 10ம் தேதி நடந்தது. இதன் ரிசல்ட் 29ம் தேதி வெளியானது. இதில், இந்தியா முழுவதும் 9,214 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை சேர்ந்த 400 பேர் தேர்ச்சியடைந்தனர். 

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் மெயின் தேர்வு நடந்தது. இதன் ரிசல்ட்டை  யுபிஎஸ்சி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டது. இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறுகையில், கடந்த 2021ம் ஆண்டு குடிமை பணிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.இதில், இந்தியா முழுவதும் 1,805 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து 86 மாணவர்கள் தேர்ச்சியடைந்தனர். 

 

Tags : 86 candidates from Tamil Nadu have passed the UPSC Main Examination

Share via