ஹஜ் பயணத்தில் 550 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

by Staff / 19-06-2024 11:41:16am
ஹஜ் பயணத்தில் 550 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

புனித ஹஜ் யாத்திரையின் போது 550க்கும் மேற்பட்டோர் அதீத வெப்பத் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாக அரபு தூதர்கள் நேற்று தெரிவித்தனர். இறந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள் , 60 பேர் ஜோர்டானியர்கள். தற்போது மக்காவில் 50 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரை புனிதப் பயணமாகும். இது இஸ்லாமியர்களின்  முக்கிய கடமைகளில் ஒன்று.

 

Tags :

Share via