போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது

by Staff / 19-06-2024 11:38:44am
போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது

சிதம்பரத்தில், பல்வேறு பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்கள் பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த தீட்சிதர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 5,000-க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 2 கம்ப்யூட்டர்கள், லேப்டாப், பிரிண்டர் செல்போன் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo