50 வருஷத்துக்கு சார்ஜர் தேவையில்லை
சார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தக்கூடிய பேட்டரியை சீன நிறுவனமொன்று உருவாக்கி அசத்தியுள்ளது. சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஒன்றான ‘பீட்டா வோல்ட்’ (Beta volt) புதிய வகை பேட்டரியை தயாரித்திருப்பதாக அறிவித்திருக்கிறது. தங்கள் பேட்டரி 50 ஆண்டுகள் நீடிக்கும் என்றும், சாதாரண பேட்டரிகளைப் போல நிலையான சார்ஜிங் அல்லது பராமரிப்பு தேவைப்படாது என்றும் பீட்டா வோல்ட் நிறுவனம் உத்தரவாதம் அளித்திருக்கிறது.
Tags :