சுற்றுலா வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் பலி

by Staff / 13-01-2024 01:32:24pm
சுற்றுலா வாகனங்கள் மோதி விபத்து - 2 பேர் பலி

ராமேஸ்வரத்தில் தனுஷ்கோடி அருகே சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் காயமடைந்தார்கள். முன்னாள் சென்ற அரசுப் பேருந்து திடீரென நின்றது. இதனைப் பார்த்து பின்னால் வந்த வேன் ஓட்டுநர், பேருந்தை வலது பக்கமாகக் கடந்து செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த இன்னொரு சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், தனுஷ்கோடிக்கு சென்ற வேன் கவிழ்ந்தது. விபத்தில் வேனின் முன்பகுதி முழுவதும் சேதமானது.
 

 

Tags :

Share via

More stories