செண்பகாதேவி அம்மன் ஆலயத்தில் பௌர்ணமி திருவிழா தொடங்கியது.

தென்காசி மாவட்டம் திருக்குற்றால நாதர் ஆலயத்தின் உடைய கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு செண்பகாதேவி அம்மன் ஆலயம்.குற்றாலம் பேரருவிக்கு மேல் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த திருக்கோவிலில் மிகவும் சிறப்பு பெட்ரா திருவிழா சித்திரை பௌர்ணமி திருவிழா.இந்தத்திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி அம்மாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒரு பகுதியாக ஆலய வளாகத்தில் சிறப்பு பூஜைகளும் நடந்து வருகின்றன. தினமும் காலை அபிஷேகம் தீபாராதனை மற்றும் உச்சிகால அபிஷேகம் தீபாராதனை இரவு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை உள்ளிட்டவைகள் நடைபெறுகின்றன. விழாவில் சிகர நிகழ்ச்சியாக 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணி அளவில் தீர்த்தவாரி செண்பகாதேவி அருவியில் நடைபெறுகின்றது. அன்றைய தினம் காலை 8:30 மணிக்கு அபிஷேகம் தீபாரதனை, அம்மன் புறப்பாடு, உச்சி கால அபிஷேகம், தீபாராதனை, சிறப்பு வழிபாடு மற்றும் அம்மன் புறப்பாடு உள்ளிட்டவையில் நடைபெறுகின்றன,
Tags : செண்பகாதேவி அம்மன் ஆலயத்தில் பௌர்ணமி திருவிழா தொடங்கியது.