பெங்களூருவிலிருந்து சென்னைக்கு போதைப்பொருள்  5 பேர் கைது.

by Editor / 04-10-2024 10:15:03am
பெங்களூருவிலிருந்து சென்னைக்கு போதைப்பொருள்  5 பேர் கைது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மெத்த பெட்டமைன் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து மாநகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி கே கே நகர் பகுதியில் மெத்த பெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த யோகா மாஸ்டர் ராஜேஷ், வங்கி ஊழியர் சாய் பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இவர்கள் கொடுத்த தகவல் அடிப்படையில் சென்னையில் விற்பனை செய்வதற்காக பெங்களூரை சேர்ந்த அருண் என்பவரிடம் இருந்து, மெத்த பெட்டமைன்வாங்கி வருவதாக தகவல் தெரிவித்தனர்.

இருவரும் அளித்த தகவல் அடிப்படையில் பெங்களூருவைச் சேர்ந்த அருண்குமார், ரிஸ்வான், ஷாரூக், சையது, நிதின் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து கார், செல்போன்கள், மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள், ரூ.20,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

 

Tags : பெங்களூருவிலிருந்து சென்னைக்கு போதைப்பொருள்  5 பேர் கைது.

Share via

More stories

Logo