ஆர்.எஸ்.எஸ்.மண்டல் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

by Editor / 24-09-2022 11:01:25pm
ஆர்.எஸ்.எஸ்.மண்டல் தலைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை மேல இருப்பானேடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வரும்  கிருஷ்ணன் (வயது 55)  கிருஷ்ணன் கம்யூட்டர் சாம்பிராணி தயாரிப்பு தொழில் செய்து வருகிறார் ஆர் எஸ் எஸ் அமைப்பில் அனுப்பானடி பகுதி மண்டல் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இரவு இன்று 7.30 மணியளவில் 2 பேர் கொண்ட கும்பல் டூ வீலரில் வந்து 2 பெட்ரோல் குண்டுகளை கார் ஷெட்டில் வீசியதில் சரக்கு வாகனத்தின் மேல் விழுந்து ஒன்றும்.மற்றென்று வெளியேயும்  விழுந்து வெடித்தது. இதில் வெடிக்காத  மற்றொரு பெட்ரோல் குண்டு ஒன்று கார்ஷெட்டின் உள்ளே விழுந்துள்ளது.இதனைக்கண்ட சாலையில் சென்றவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் உறைந்துபோய் நின்றுள்ளார்.அந்தவழியே இருசக்கர வாகனத்திலும்,நடந்து சென்ற பெண்ணும் அதிர்ச்சியடைந்த நிலையில் அந்த நபர் இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து சம்பஇடத்திற்கு மதுரை காவல்துறை துணை ஆணையர் சீனிவாச பெருமாள்  தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு அருகில் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.பரபரப்பான மதுரை மாநகர் மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories