தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கும் 5 நாட்கள் விடுமுறை.!

by Editor / 25-08-2022 09:43:50pm
தமிழகத்தில்  பள்ளி மாணவர்களுக்கும் 5 நாட்கள் விடுமுறை.!

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்று வரும் 1 ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டிருந்தது. அதாவது, 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது.

அதாவது, மொழிப் பாடம் செப்டம்பர் 26 ஆம் தேதியும், ஆங்கிலம் செப்டம்பர் 27 ஆம் தேதியும், கணிதம் செப்டம்பர் 28 ஆம் தேதியும், அறிவியல் செப்டம்பர் 29 ஆம் தேதியும், சமூக அறிவியல் செப்டம்பர் 30 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரைக்கும் நடைபெற இருக்கிறது. அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுவிட்டது.

தற்போது 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் காலாண்டு தேர்விற்கு தயாராகி கொண்டிருக்கின்றனர். மேலும், காலாண்டு தேர்வினை தொடர்ந்து ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி வருகிறது. இதனால், 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு முடிந்ததும் அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரைக்கும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில்  பள்ளி மாணவர்களுக்கும் 5 நாட்கள் விடுமுறை.!
 

Tags :

Share via