சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து 750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்.

by Editor / 25-08-2022 09:48:14pm
சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து  750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்.

தமிழகத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. அன்னை மரியாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8ம் தேதி அன்று ஆண்டுதோறும் ஆண்டு பெருவிழா நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில் இந்த திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வேளாங்கண்ணி புனித அன்னை ஆரோக்கிய மாதா ஆலய விழாவை முன்னிட்டு இன்று முதல் வருகிற செப்டம்பர் 11ம் தேதி வரை பக்தர்களின் நலன் கருதி சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் 750 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை, பெங்களூரு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்.

Share via

More stories