பக்தர்கள் சூரபத்மனை முருக பெருமான் வதைக்கும் காட்சியை கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

by Admin / 18-11-2023 05:49:32pm
பக்தர்கள் சூரபத்மனை முருக பெருமான் வதைக்கும் காட்சியை கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்று சூர சம்கார விழா அறுவடை வீடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சூரனை வதம் செய்து வெல்லும் முருகனின் காட்சியை காண ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து நின்று சூரபத்மனை முருக பெருமான் வதைக்கும் காட்சியை கண்டு களித்துக் கொண்டிருக்கிறார்கள். சேவல்கொடியோன்  என்று அழைக்கப்படுகின்ற முருகப்பெருமான் சூரனை அழித்து அவன் வேண்டுதலை ஏற்று தன் கொடியின் சின்னமாக சேவலை வரித்துக் கொண்ட புராணக் கதைகளை விளக்கும் விதமாக சூரசம்கார நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றது .கூட்டத்தில் இருந்து முருக பெருமானிற்கு அரோகரா கோஷங்கள் முழங்கி கொண்டிருக்கின்றன. திருச்செந்தூரில்  கடலின் அலை ஓசையை விட பக்தர்களினுடைய ஓசை அதிகரித்து நான்கு திசையும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது.திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம் என அறுவடை வீடுகளில் எங்கும் சூரசம்ஹார நிகழ்வு நடந்து கொண்டிருக்கின்றது.

 

Tags :

Share via