திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறு பேச்சிற்கு நடவடிக்கை ..? தேசிய மகளிர் ஆணையம் கடிதம்.

by Editor / 08-11-2022 08:23:00am
திமுக பேச்சாளர் சைதை சாதிக் அவதூறு பேச்சிற்கு  நடவடிக்கை ..? தேசிய மகளிர் ஆணையம் கடிதம்.

சென்னை கே.கே.நகரில் திமுக சார்பில் கடந்த அக்டோபர் 26-ம் தேதி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, கௌதமி, நமீதா, காயத்ரி ரகுராம் ஆகியோரை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சைதை சாதிக் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்த நிலையில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மன்னிப்பு தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணியினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சைதை சாதிக் மீது ஆபாசமாக பேசுதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

இதையடுத்து  தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மாவை சந்தித்த குஷ்பு, சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்துள்ளார்.அவரை அளித்த மனுதொடர்பாக குஷ்பூ உள்ளிட்ட நான்கு பிஜேபி பெண் நிர்வாகிகளை இழிவாகப் பேசிய சைதை சாதிக் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக  D.G.P. க்கு டெல்லி தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா ஷர்மாவிடமிருந்து  கடிதம்அனுப்பபட்டுள்ளது.

 

Tags :

Share via