7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை, 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

சென்னை, திருவள்ளூர், கடலூர், நாகை உட்பட 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும், ராணிப்பேட்டை, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 7ஆம் தேதி மாலை புயலாக வலுவடையக்கூடும். இது மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து 08-09ஆம் தேதிகளில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.மேலும், இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ரெட் அலர்ட்
வரும் 8ஆம் தேதி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதிக கனமழை பெய்யக்கூடும்.
ஆரஞ்சு அலர்ட்
ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
Tags :