சபரிமலை சென்ற கர்நாடக மாநில பக்தர்கள் பேருந்து சாலையில் கவிழ்ந்து 20 பேர் காயம்.
சபரிமலைக்கு கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து நேற்று இரவு 9 மணி அளவில் 48 நபர்கள் ஒரு பேருந்தில் சபரிமலைக்காக மாலை அணிவித்து விரதம் இருந்து இன்று ஐப்பசி மாதம் ஒன்றாம் தேதி என்பதால் சுவாமி தரிசனம் செய்வதற்கு வந்து கொண்டிருந்தனர் அவர்கள் இன்று காலை 6:15 மணிக்கு பத்திரமாகிட்ட மாவட்டம் எரிமேலி சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது கனமழா என்கின்ற கட்டமடை பகுதியில் பேருந்து எதிர்பாராத விதமாக சாலையில் கவிழ்ந்தது இதில் பேருந்தில் இருந்த சுமார் 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் மேலும் இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை காயம் பட்டு அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர் தொடர்ந்து பேருந்து அப்புறப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன அதிகாலை பொழுதில் எதிர்பாராத விதமாக நடந்த இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















