வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் விருந்து நிகழ்வில்துப்பாக்கி சூடு
நேற்று இரவு அமெரிக்கா வாஷிங்டன் டிசியில் உள்ள வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் விருந்து நிகழ்வு நடந்தது. நிகழ்வின் பொழுது துப்பாக்கி சூடும் சத்தம் கேட்டது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ,மெலானி ட்ரம்ப், துணை அதிபர்ஜே.டி.வான்ஸ் அமைச்சரவை உறுப்பினர்கள் உடனடியாக சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் இல்லை. அஞ்சு முதல் ஏழு முறை சுடப்பட்ட சத்தம் கேட்டதாக பார்வையாளர்கள் தரப்பிலிருந்து தெரிவித்தனர் .ஹோட்டலின் பாதுகாப்பு சோதனை பகுதிக்கு அருகே இந்த துப்பாக்கி சூடு நடந்தது. ஒரு சட்ட அமலாக்க அதிகாரி புல்லட் குரூப்பு உடையில் இருந்த போதும் கூட அவர் சுடப்ப்பட்டு காயத்துடன் தப்பினார். 30 வயதுடைய கலிபோர்னியாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்திற்கு பின்னர் அதிபர் ட்ரம் சோசியல் ரூத் பக்கத்தில் சீக்ரெட் சர்வீஸ் மற்றும் சட்ட அமலாக்கம் விரைவாகவும் தைரியமாகவும் செயல்பட்டதாகவும் துப்பாக்கி சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் 30 நாட்களுக்குள் நிகழ்ச்சியை மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது அதிபராக பதவி ஏற்ற பிறகு கலந்து கொண்ட முதல் வெள்ளை மாளிகை செய்தியாளர் விருந்தாகும்.
Tags :



















