புதைக்கப்பட்ட பெண் குழந்தை சடலம் தோண்டி எடுத்து விசாரணை

by Staff / 22-08-2023 05:31:50pm
புதைக்கப்பட்ட பெண் குழந்தை சடலம் தோண்டி எடுத்து விசாரணை

மதுரை வில்லாபுரம் அகஸ்தியர் தெரு பகுதியைச் சேர்ந்தகாளீஸ்வரன்(27).கார்த்திகைஜோதி( 25)தம்பதியினருக்கு அரிமித்ரன் என்ற ( 5) ஒரு ஆண் குழந்தையும், அதிதி நாச்சியார் என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளது.இந்நிலையில் குழந்தை அதிதி நாச்சியாருக்கு பிறந்தது முதல் இதய நோய் உள்ளது. இது தொடர்பாக அவர்கள் பல்வேறு மருத்துவமனையில் பரிசோதனை செய்து வருகின்றனர் நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மீண்டும் மதுரை வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் 6 மாத பெண் குழந்தை அதிதி நாச்சியார் இறந்து விட்டதாகவும், இதனால் அருகில் உள்ள இடத்தில் நேற்று அதிகாலை புதைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு வந்த தகவலதகவல் அடிப்படையில்,சம்பவ இடத்தில் அவனியாபுரம் காவல்துறையினர் பாதுகாப்பில் மதுரை தெற்கு தாசில்தார் முத்துப்பாண்டி ஆர் ஐ பிருந்தா கிராம் நிர்வாக அலுவலர் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் தோண்டி எடுத்து குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Tags :

Share via
Logo