அரசு பள்ளிகளில் 28-ந் தேதி நிர்வாகக் குழு கூட்டம்

by Staff / 26-10-2022 04:00:27pm
அரசு பள்ளிகளில் 28-ந் தேதி நிர்வாகக் குழு கூட்டம்

அரசு பள்ளிகளில் மேலாண்மை குழு கடந்த ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. முதலில் தொடக்கப் பள்ளிகளும், அதனை தொடர்ந்து உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகளுக்கும் நிறுவப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுவில் தலைமை ஆசிரியர், அந்த பகுதி கவுன்சிலர், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர், பெற்றோரர் என மொத்தம் 20 பேர் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு மாதமும் முதல் கடைசி வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் கூடி வளர்ச்சி பணிகள் குறித்த முடிவுகளை எடுத்து வருகின்றனர்.
இந்த மாதத்திற்கான மேலாண்மை குழு கூட்டம் வருகிற 28-ந் தேதி மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறுகிறது. வட்டார மற்றும் மாவட்ட அளவில் கல்வி அதிகாரிகள் இதனை கண்காணிக்கிறார்கள்.

 

Tags :

Share via

More stories