திருநெல்வேலி விபத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்பலி அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு.

by Editor / 09-06-2025 09:49:16am
திருநெல்வேலி விபத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்பலி அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு.

திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டி அருகே சிவாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் செல்வராஜ், (08.06.2028)நேற்றிரவு சாலையைக் கடக்க முயன்றபோது, திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்குச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் பேருந்து நிலைதடுமாறி அருகிலுள்ள பள்ளத்திற்குள் இறங்கியது. இந்த விபத்தில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

விபத்து குறித்து அறிந்த சிவாஜி நகர் பகுதி மக்கள், ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மானூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். அப்பகுதியில் அடிக்கடி அரசுப் பேருந்துகள் அதிவேகமாகச் செல்வதால் விபத்துகள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

பொதுமக்களின் சாலை மறியலால், திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்கும், சங்கரன்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கும் செல்லும் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. 
 

 

Tags : திருநெல்வேலி விபத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்பலி அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு.

Share via