மனைவி பிரிந்த துக்கத்தில் கூலிதொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

by Staff / 24-10-2023 01:12:23pm
மனைவி பிரிந்த துக்கத்தில் கூலிதொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

சேலம் நெத்திமேடு கேபி கரடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் வயது 42 இவர் வெல்டிங் பட்டறையில் கூலி வேலை செய்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் மகன்கள் ரமேஷை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். மனைவி மற்றும் மகன்கள் பிரிந்து தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார் இன்று அதிகாலை அதே பகுதியில் வசிக்கும் பாத்திமா என்பவர் ரமேஷின் வீடு திறந்து கிடந்ததை கண்டு உள்ளே சென்று பார்த்தபோது ரமேஷ் தூக்கில் சடலமாக தூங்கி உள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த பாத்திமா அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via