43 ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு 20 ஒன்றிய கவுன்சிலர்கள் சார்பில் சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில் பொங்கல் விழா

by Editor / 05-01-2022 10:52:33pm
 43 ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு  20 ஒன்றிய கவுன்சிலர்கள் சார்பில் சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில்  பொங்கல் விழா

உலகப் புகழ்பெற்ற சித்தன்னவாசலில் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 43 ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஊராட்சி மன்றத் தலைவர்கள் குலவையிட்டு பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை விரைவில் வர உள்ளது இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 43 ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு மற்றும் 20 ஒன்றிய கவுன்சிலர்கள் சார்பில் உலகப் புகழ் பெற்ற சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில் இன்று பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

புகழ்பெற்ற சுற்றுலா தளமான சித்தன்னவாசலில் பூங்காவில் வண்ண கோலமிட்டு
புதுப்பானையில் பொங்கலிட்டு கரும்பு உள்ளிட்டவைகளை படையலிட்டு பொங்கல் பானையை பற்ற வைத்தனர் பொங்கல் பொங்கி வந்த பிறகு பெண் ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் ஆகியோர் குலவை சத்தம் இட்டு பொங்கல் பண்டிகையை வரவேற்று சிறப்பாக கொண்டாடினர் பொங்கல் பொங்கிய பின்னர் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது.
 

 43 ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு  20 ஒன்றிய கவுன்சிலர்கள் சார்பில் சித்தன்னவாசல் சுற்றுலா தளத்தில்  பொங்கல் விழா
 

Tags :

Share via