மணிப்பூருக்கு வாருங்கள் - பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீரர் கோரிக்கை

by Staff / 11-03-2024 01:41:08pm
மணிப்பூருக்கு வாருங்கள் - பிரதமர் மோடிக்கு குத்துச்சண்டை வீரர் கோரிக்கை

மணிப்பூரைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் சுங்ரெங் கோரன் பிரதமர் மோடிக்கு கண்ணீர் மல்க கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சமீபத்தில், மேட்ரிக்ஸ் பைட் நைட் (MFN) போட்டியில் பங்கேற்று வெற்றிக்கோப்பையுடன் பேசிய சுங்ரெங் கோரன், மணிப்பூரில் வன்முறை தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடமாகிவிட்டது, மக்கள் செத்து மடிகின்றனர், குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை. நீங்கள் ஒருமுறை மணிப்பூருக்கு வந்து எங்களின் நிலையைப் பாருங்கள்.பலர் நிவாரண முகாம்களில் உள்ளனர். இந்த நிவாரண முகாம்களில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. எனவே பிரதமர் மோடி தயவு செய்து ஒருமுறை மணிப்பூருக்கு சென்று அமைதியை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசியுள்ளார்.

 

Tags :

Share via

More stories