எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

by Staff / 16-10-2022 01:20:34pm
எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்க உள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டப்பேரவை நாளை கூடவுள்ள நிலையில் ,சட்டப்பேரவையில் எழுப்ப வேண்டிய பல்வேறு விஷயங்கள் குறித்து எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக எம்.எல்.ஏ,க்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.

 

Tags :

Share via