ஆளும் திமுக அரசையும் முதலமைச்சர் குடும்பத்தை மட்டுமே விஜய் தாக்கி பேசினார்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விடுமுறையின் நாள்களில் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்கிற விமர்சனங்களை தொடர்ந்து அவர் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நேற்று சனிக்கிழமை பிரச்சாரத்தை மேற்கொண்டார். நாகை மாவட்டத்தில் அவர் பிரச்சாரத்தில் ஈடுபடுகையில் மின்சாரம் தடைபடுவதாக அரசு மீது குற்றம் சாட்டினார் .அதோடு நேரடியாக சி.எம் .சார், பிரதமர் கலந்து கொண்டு பேசும் நிகழ்ச்சியிலோ... உள்துறை அமைச்சர் பேசும் நிகழ்ச்சியிலோ மின்சாரத்தை உங்களால் தடை படுத்த முடியுமா... தடைபடுத்தி தான் பாருங்களேன். என்னோடு, இதுபோன்ற செயல்களை செய்து மோதி பார்க்காதீர்கள் என்கிற மாதிரியான ஒரு குற்றச்சாட்டை வைத்து பேசினார். .ஆனால் ,உண்மையில் த.வெ.க தலைவர் வருகையின் பொருட்டு கட்சியினர் மின்கம்பங்களில் ஏறியோ ..டிரான்ஸ்பார்மர் மீது ஏறியோ அவரை காணும் ஆவலில் ஏதாவது அசம்பாவிதம் மின்சாரம் மூலம் நடந்து விடக்கூடாது என்கிற காரணத்திற்காக, நாகை மாவட்ட செயலாளர் சுகுமார் தங்களுடைய கட்சித் தலைவர் வருகையில் சில பகுதிகளில் மின்சாரத்தை தடை படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை மின்சார வாரியத்திற்கு வழங்கி இருந்தது தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.. இதனை அறியாமல் த.வெ.க தலைவர் விஜய் அரசை மின்சாரம் தடை படுத்துகிறது என்கிற ரீதியில் கடுமையாக விமர்சனத்தை செய்திருந்தார். இந்நிலையில், விஜயின் அரசியல் பயணத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. முன்னாள் அமைச்சர் அதிமுக கழக அமைப்புச் செயலாளரான கே.. டி. ராஜேந்திர பாலாஜி அதிமுக அணியில் கூட்டணி வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இதனோடு திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் செல்வாக்கோடு இருக்கும் பூண்டி கலைவாணனை மீறி எந்த கட்சியினரும் இந்தப் பகுதியில் காலூன்ற முடியாது என்பது போன்ற சமூக ஊடகங்களில் அவரது ஆதரவாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். .மாவட்ட வாரியாக விஜயினுடைய அரசியல் பயணம் எந்த அளவிற்கு ஆக்கபூர்வமாக அமையப் போகிறது என்று தெரியவில்லை.. கூட்டம் கூடுகிறது என்பதற்காக அது ஆட்சி மாற்றத்தை ...இல்லை ,வாக்குகளின் சதவீதத்தை உயர்த்தி விடும் என்று சொல்வதற்கு இல்லை.. தற்பொழுது தான் அவர் அரசியல் பிரவேசத்தில் மாவட்ட வாரியாக பிரயாணம் செய்வதால் அவருடைய முகத்தை பார்க்க வேண்டும் என்று கூடுகிற கூட்டம் தொடர்ச்சியாக வருமா என்று சொல்வதற்கு இல்லை. ஒரு முறை ..இரண்டு முறை பார்த்து விட்ட பின்பு மறுமுறை பார்க்க வராமல்போகலாம்.. பல முறைபாா்த்த பின்பு கூட்டம் பல நடிகர்களுக்கு கூடாமல் போனது உண்டு என்பது அரசியல் பாலபாடம். விஜயை தவிர்த்து தமிழக வெற்றி கழகத்தில் முகம் தெரிந்த அரசியல் பிரமுகர்கள் இதுவரை அடையாளப்படுத்தப்படவில்லை.. விஜயை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு இயக்கத்தை எப்படி வெற்றிகரமாக நடத்தி விட முடியும் என்று சொல்வதற்கு இல்லை.
.திமுக- அதிமுக இரண்டு இயக்கங்களும் வலுவான கட்டமைப்பை கொண்டதோடு ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருந்த வைத்துக் கொண்டிருக்கின்ற இயக்கம். மேடையில் ஆவேசமாக ஆக்ரோகாசமாக பேசுவதின் மூலமாக ஆளுங்கட்சியின் உடைய பலத்தை பலகீனமாக மாற்றிவிட முடியும் என்று அவ்வளவு சீக்கிரம் எடை போட்டு விட முடியாது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 1967 க்கு பிறகு தான் தமிழகம் இந்தியாவில் வளர்ச்சி அடைந்த முன்னணி மாநிலமாக மாறி இருக்கிறது.
. அண்ணா கூட தன்னுடைய பேச்சில் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று அடிக்கடி சொல்வார். ஆனால், அந்த நிலைமையை மாற்றி இன்றைக்கு பொருளாதார கட்டமைப்பில் வலுவான ஒரு மாநிலமாக இருப்பதற்கு அண்ணா ,கலைஞர் ,,எம்ஜி ஆர் , ,ஜெயலலிதா போன்றவர்களின் வலுவான திராவிட சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்ட ஆட்சியை கொண்டுதான் வலுவடைய செய்திருக்கிறார்கள் என்பதை அரசியல் கற்றவர்கள்- அறிந்தவர்கள் நன்கு தெரிந்திருப்பார்கள்.. திரைப்பட வெளிச்சத்தை மட்டுமே கொண்டு திடும் என்று அரசியல் இயக்கத்தை தொடங்கி கூடுகிற இளைஞர் கூட்டத்தை வைத்துக்கொண்டு த. வெ. க.கோட்டையில் அமர்ந்து விடும் என்று நினைப்பது பகல் கனவாக போகிவிடக்கூடும்.. நேற்றைய கூட்டத்தில் ஆளும் திமுக அரசையும் முதலமைச்சர் குடும்பத்தை மட்டுமே விஜய் தாக்கி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கு பொது எதிரியாக திமுக மட்டுமே உள்ளது என்கிற கருத்தை அவர் தம் கூட்டத்தின் மூலமாக வலியுறுத்தி உள்ளார்.
Tags :