சேலம் மத்திய சிறை வார்டன்கள் பணியிடை நீக்கம்.
சிவகங்கையை சேர்ந்த பிரபல ரவுடி வழிப்பறி வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று ஜாமீனில் வெளியே வந்தார். இவர் மீது வாரண்ட் இருப்பதால் சிவகங்கை தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்ய காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும் ஒரே ஒரு முதியோர் மட்டுமே சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த தனிப்படை போலீசார் சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது சம்பந்தப்பட்ட ரவுடி 11:30 மணிக்கு வெளியே சென்று விட்டதாக தெரிவித்த நிலையில் இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகங்கை தனிப்படை போலீசார் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஒரே ஒரு பாதைதான் உள்ளது இந்தப் பாதையில் அவர் செல்லவில்லை என்று கேட்ட நிலையில் இது தொடர்பாக விசாரணையில் சிறை அதிகாரிகள் ரவுடியை வேறு வழியாக தப்பிக்க வைத்து தெரிய வந்தது.
விசாரணையில் சிறை காம்பவுண்ட் சுவரில் இருக்கும் கேண்டீன் ஷட்டரை திறந்து வெளியே அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி மற்றும் அஸ்தம்பட்டி போலீசார் சிறை சென்று விசாரணை நடத்திய நிலையில் சிறை வார்டன்கள் ரமேஷ், பூபதி ஆகியோகைதியை கடத்தி அனுப்பியது தெரியவரவே அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உத்திரவிட்டுள்ளார்.
Tags : Salem Central Jail wardens sacked