பிக்பாஸ் சீசன் -6 எப்பொழுது ?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்நிகழ்ச்சியின் ஐந்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற பொழுது போக்கு நிகழ்ச்சியாகும்.ஏற்கனவே ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களும் ஒரளவு வெளியில் தெரிந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் மேலும் வளரவும் புகழ்பெறவும் பிக்பாஸ் நிகழ்ச்சி அவர்களுக்கு கைகொடுத்து தூக்கிவிடுகிறது.அத்துடன்,அந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களுக்கிடையே நடக்கும் அன்பு,பாசம்.போட்டி,பொறாமை,குரோதம்,அவமதிப்பு,குடும்பகசோகம்,வசதியின்மை, காதல் என ஒரு கலவையான ருசிகரநிகழ்வுகள் தினமும் அரங்கேறுவதால் ரசிகர்களுக்கு பொழுதுபோக்கோடு அடுத்தவர் வாழ்வியலை அறியும் ஆர்வத்திற்குதீனி போடுவதாலும் இந்நிகழ்ச்சி வெற்றி பெற்று வருகிறது.தற்பொழுது பிக்பாஸின் அடுத்த சீசனை கமல்ஹாசன்அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.அக்டோபர் -9 ந்தேதி பிக்பாஸ் ஒளிபரப்பாகிறது.
Tags :