திருவாரூரில் மீண்டும் ஆர்.எம்.எஸ். அஞ்சல் பிரிப்பகம் இயங்க மத்திய அரசு அனுமதி.

திருவாரூரில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்தில் செயல்பட்டு வந்த திருவாரூர் மற்றும் நாகப்படினம் மாவட்டத்திற்கான ஆர் எம் எஸ் என்கிற அஞ்சல் பிரிப்பகத்தை மயிலாடுதுறைக்கு மாற்றுவதாக மத்திய அஞ்சலக துறை அறிவித்ததையடுத்து நேற்று அனைத்துக் கட்சி சார்பில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் தலைமையில் திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாயிலாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்ததையடுத்து தற்போது மத்திய அஞ்சலக துறை அஞ்சல் பிரிப்பகம் திருவாரூரிலேயே செயல்பட அனுமதித்துள்ளது. மேலும் மயிலாடுதுறையில் செயல்பட்டு வந்த விரைவு அஞ்சல் பிரிப்பகத்தையும் திருவாரூருக்கு மாற்றி அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : திருவாரூரில் மீண்டும் ஆர்.எம்.எஸ். அஞ்சல் பிரிப்பகம் இயங்க மத்திய அரசு அனுமதி.