ஆன்லைன் மூலம் பெண் உள்பட 2 பேரிடம் ரூ. 14 1/2 லட்சம் மோசடி

by Staff / 01-12-2023 12:21:25pm
ஆன்லைன் மூலம் பெண் உள்பட 2 பேரிடம் ரூ. 14 1/2 லட்சம் மோசடி

சேலம் மாவட்டம் காடையாம்பட்டியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கடந்த செப்டம்பர் மாதம் 6-ந் தேதி இன்ஸ்ட் ராகிராம், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகு திநேர வேலை தேடி கொண்டிருந்தார். அப்போது, ஒருவர் கொடுத்த இன்ஸ்ட்ராகிராம் ஐ. டி. களை பின் தொடர்வது மற் றும் லைக் செய்வது போன்ற பணியில் ஈடுபட்டு சில தக வலை பெற்றுள்ளார். பின்னர் சம்பந்தப்பட்ட நபர் கூறிய இணையதளத்தில் பதிவு செய்து பணத்தை முதலீடு செய்யு மாறு கூறியுள்ளார். பின்னர் அதை உண்மை என நம்பிய அந்த பெண். பல்வேறு தவணைகளில் ரூ. 7 லட்சத்து 95 ஆயிரத்து 500-ஐ அனுப்பி வைத்தார். அதற்கு கமிஷன் தொகையாக ரூ. 5 ஆயிரத்து 940 மட்டும் கிடைத்தது. ஆனால் பகுதி நேர வேலையும். முதலீடு செய்த பணமும் கிடைக்கவில்லை. இதனால் ஆன்லைன் மூலம் ரூ. 7 லட்சத்து 89 ஆயிரத்து 560-ஐ மோசடி செய்துவிட் டதாகவும், அதனை மீட்டுத்தரக்கோரியும் அந்த பெண், மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo