ஆளுநரை வில்லனாக காட்ட திமுக முயற்சி - அண்ணாமலை

by Staff / 10-07-2023 01:10:21pm
ஆளுநரை வில்லனாக காட்ட திமுக முயற்சி - அண்ணாமலை தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லை, அரசின் மீதான தவறுகளை மறைக்க ஆளுநரை வில்லனாக்க முயற்சி நடக்கிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'ஆளுநர் அரசியல் பேசக்கூடாது என்று நானே சொல்லி இருக்கிறேன். தமிழக அரசு கூறுவதை ஆளுநர் அப்படியே ஒப்பிக்க வேண்டுமா?, செந்தில் பாலாஜியை காப்பாற்றி கூடவே வைத்துக் கொள்ள திமுக முயற்சிக்கிறது. அவர் என்ன புத்தரா?, நிறைவேற்ற முடியாத பல திட்டங்கள் இன்னும் கிடப்பில் உள்ள நிலையில், ஆளுநர் மீது பழிபோடுகிறது' என்று கூறினார்.
 

Tags :

Share via

More stories